2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

முதன்முறையாக ரஷ்ய வீரருக்கு உக்ரேனில் ஆயுள் தண்டனை

Freelancer   / 2022 மே 23 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரேனில் நடத்தப்பட்ட போர்க்குற்ற விசாரணையில் நிராயுதபாணியான உக்ரேனிய குடிமகனைக் கொன்ற ரஷ்ய சிப்பாய்க்கு முதன்முறையாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

நிராயுதபாணியான 62 வயதுடைய குடிமகனைக் கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட ரஷ்ய இராணுவ வீரர் ஒருவருக்கு, முதல் போர்க்குற்ற விசாரணையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

21 வயதான ரஷ்ய டேங்க் கமாண்டர் வாடிம் ஷிஷிமரின்,  கிய்வ் மாவட்ட நீதிமன்றத்தில் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இது ரஷ்ய படையெடுப்பு தொடங்கி நான்கு நாட்களுக்குப் பிறகு இடம்பெற்றிருந்த ஒரு குற்றச்செயலாகும்.

தீர்ப்பு வாசிக்கப்படும்போது குறித்த ரஷ்ய வீரர் எந்த உணர்ச்சியையும் காட்டவில்லை.

SBU என அழைக்கப்படும் உக்ரைனின் பாதுகாப்பு சேவை, இந்த மாத தொடக்கத்தில் ஷிஷிமரின் அந்த நபரை எப்படி சுட்டார் என்பதை விவரிக்கும் வீடியோவை வெளியிட்டது.

"எனக்கு சுட உத்தரவிடப்பட்டது. நான் அவரை சுட்டேன். அவர் விழுந்தார். நாங்கள் தொடர்ந்து சென்றோம்." என்று அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

விசாரணையின் தீர்ப்பு குறித்து கிரெம்ளின் உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .