2025 மே 17, சனிக்கிழமை

லுஸில் ராண்டன் காலமானார்

Ilango Bharathy   / 2023 ஜனவரி 19 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலகின் மிகவும் வயதான கன்னியாஸ்திரியாக  கின்னஸ் சாதனைபடைத்த பிரான்ஸைச் சேர்ந்த  லுஸில் ராண்டன் (Lucile Randon) தனது 118 ஆவது வயதில் நேற்று முன்தினம்(17 ) காலமானார்.

1904ஆம் ஆண்டு பிறந்த இவர் தனது 41ஆவது வயதில் கன்னியாஸ்திரியாக முடிவெடுத்தார் எனவும் அதன் பின்னர் ஒரு மருத்துவமனையில் 31 ஆண்டுகள் பணிபுரிந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த 2021ஆம் ஆண்டு COVID-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிர்பிழைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவர் டூலோன் (Toulon) நகரில் உள்ள தாதிமை இல்லத்தில் உறக்கத்தில் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .