2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வங்கதேசத்தில் வரி ஏய்க்கும் சீன நிறுவனங்கள்

Freelancer   / 2022 மே 21 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருநிறுவன நெறிமுறைகளில் மோசமான பிம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள சீன நிறுவனங்கள், பங்களாதேஷில் ஊழல் மற்றும் குற்றச்செயல்கள் மூலம் தொடர்ந்து சட்டங்களை மீறுவதால் தேசிய கருவூலத்துக்கு இழப்பு ஏற்படுவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில், சீன நிறுவனமான சினோ-கெம்மெட் டிரேடிங் கோ வரி ஏய்ப்பு செய்த விவகாரம் வங்கதேச அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

சென்ஷெனில் அமைந்துள்ள குளோபல் பெட் புரொடெக்ட் கோ லிமிட்டடின் துணை நிறுவனமான சினோ-கெம்மெட்டிரேடிங் நிறுவனம், அதன் டாக்காவைச் சேர்ந்த 'என்பி டிரேடிங் ஹவுஸ்' நிறுவனத்துக்கு பூசிய கல்சியம் கார்பனேட்டை அனுப்புவதாக அறிவித்துள்ளது.

இருப்பினும், சோதனையின் போது அதிக மதிப்புள்ள 120 தொன் டெக்ஸ்ட்ரோஸ் மோனோஹைட்ரேட்டை  பங்களாதேஷ் அதிகாரிகள் மீட்டனர்.

பூசப்பட்ட கால்சியம் கார்பனேட் என்ற லேபிளுக்கு உள்ளே டெக்ஸ்ட்ரோஸ் மறைத்து வைக்கப்பட்டதாக பங்களாதேஷ் லைவ் நியூஸ் தெரிவித்துள்ளது.

ஊடக அறிக்கையின்படி, இந்த சரக்கு சிட்டகொங் துறைமுகத்துக்கு வந்து, வாஷி ஷிப்பிங் பிரைவேட் லிமிடெட் கீழ் ஐந்து கொள்கலன்களில் கொண்டு செல்லப்பட்டது.

அதிகாரிகள் அதை சரியான நேரத்தில் கண்டுபிடிக்கவில்லை என்றால், கருவூலத்துக்கு 42 லட்சத்து 13 ஆயிரம் பங்களாதேஷ் டக்கா இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

சீன நிறுவனங்களின் பெயர் மற்றும் உண்மையான அடையாளங்களை வெளியிடக்கூடாது என்று துறைமுக அதிகாரிகள் / சுங்கத்துறை உயர் மட்டங்களில் இருந்து பெரும் அழுத்தத்துக்கு உள்ளாகியதாக சில ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பங்களாதேஷில் வரி மோசடியில் ஈடுபட்டுள்ள தங்கள் நிறுவனங்களின் ஈடுபாட்டை எடுத்துக்காட்டும் ஊடக அறிக்கைகள் குறித்து சீன அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர்.
 
பீஜிங் தன்னை நம்பகமான பொருளாதாரப் பங்காளியாகக் கருதினாலும், அதன் பொருளாதார கூட்டாண்மை பெறுநர் நாடுகளுக்கு அண்டரண்டப் பறவையாக மாறிவருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .