2024 மே 25, சனிக்கிழமை

வெள்ளப்பெருக்கில் 15 பேர் பலி

Freelancer   / 2024 மே 05 , பி.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேசியா நாட்டின் தெற்கே சுலாவெசி மாகாணத்தில் லுவு பகுதியில் பெய்த கனமழையில், பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் நில சரிவில் 15 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் 2 பேர் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் 100 வீடுகள் வரை சேதமடைந்துள்ளதோடு, 42 பேர் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். 4 சாலைகளும், ஒரு பாலமும் சேதமடைந்துள்ளன.

அதேசமயம், வெள்ளம் மற்றும் நில சரிவு பாதிப்புகளில் இருந்து தப்பிப்பதற்காக, 115 பேர் மீட்கப்பட்டு மசூதிகள் அல்லது அவர்களுடைய உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டின் பேரிடர் மேலாண் கழகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சில பகுதிகளில் காடுகள் அழிப்பு மற்றும் நீண்டநேரம் மழைப்பொழிவு போன்றவற்றால் நிலைமை மோசமடைந்துள்ளது. இதனால் 1,300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .