Freelancer / 2026 ஏப்ரல் 14 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டோம் என்று அமெரிக்க இராணுவம் அறிவித்து உள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை 8 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் அமெரிக்கா - ஈரான் இடையே போர் நடைபெற்று வந்தது. கடந்த 8 ஆம் திகதி இருதரப்பிலும் 2 வாரங்களுக்கு போர் நிறுத்தம் அமல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த 11 ஆம் திகதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுமார் 21 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, “ஹார்முஸ் ஜலசந்தியை மூடும் நடவடிக்கை விரைவில் தொடங்கப்படும்.’’ என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார்.
இதுகுறித்து அமெரிக்க இராணுவம் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,
ஜனாதிபதி ட்ரம்ப்பின் உத்தரவை ஏற்று அமெரிக்க நேரத்தின் படி ஏப்ரல் 13 ஆம் திகதி காலை 10 மணிக்கு (இலங்கை நேரப்படி ஏப்ரல் 13 இரவு 7.30) ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படும். இதன்பிறகு ஈரான் துறைமுகங்களில் இருந்து வரும் அனைத்து கப்பல்களும் தடுத்து நிறுத்தப்படும். மற்ற நாடுகளின் துறைமுகங்களில் இருந்து வரும் கப்பல்களை தடுக்க மாட்டோம். அவை வழக்கம்போல கடந்து செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நேரப்படி நேற்று இரவு 7.30 மணிக்கு ஹார்முஸ் ஜலசந்தியின் இருபுறங்களையும் அமெரிக்க போர்க்கப்பல்கள் சுற்றி வளைத்தன. அமெரிக்காவின் கண்காணிப்பை மீறி ஈரானில் இருந்து வரும் எந்த கப்பலும் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முடியாது என்று இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. (a)
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago