Freelancer / 2024 நவம்பர் 13 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்று, இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் இராணுவத்துக்கும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கும் இடையே போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாக வெளியான செய்தி குறித்து கருத்து தெரிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்துரைத்த அவர், “போர் நிறுத்தம் தொடர்பாக ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுடன் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த மாட்டோம். ஆயுதங்களை கடத்த மாட்டோம் என்று ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் உறுதி அளிக்க வேண்டும்.
“ அவ்வாறு வாக்குறுதி அளித்தால் மட்டும் போதாது. அந்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும். அதுவரை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படாது. ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்படும். எங்களது முழு பலத்தோடு தாக்குதலை தொடருவோம். ஈரான் அரசுக்கு இஸ்ரேல் ராணுவத்தின் வலிமையை புரிய வைத்துள்ளோம். ஈரானின் அணு ஆயுத திட்டங்களை தகர்க்க இஸ்ரேல் உறுதி பூண்டிருக்கிறது” என்றார்.
இது தொடர்பில், ஹிஸ்புல்லாவின் ஊடக பிரிவு தலைவர் முகமது ஆரிப் கூறுகையில்,, “போர் நிறுத்தம் தொடர்பாக இஸ்ரேலுடன் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. எனினும் இருதரப்புக்கு இடையே மூன்றாம் தரப்பு மூலம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன" என்று தெரிவித்தார்.
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago