2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மாகாண மட்ட கபடி போட்டி

Kanagaraj   / 2014 மே 31 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்


கிழக்கு மகாண விளையாட்டுத் துறை அமைச்சும், விளையாட்டுத்துறை திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த கிழக்கு மாகாண மாவட்டங்களிடையேயான ஆண் மற்றும் பெண்களுக்கிடையிலான கபடி போட்டிகள் இன்று சனிக்கிழமை(31) மட்டக்களப்பு பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு அதிகாரி கே.ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில், மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்குபற்றினர்.

இக்கபடி போட்டி நடைபெறும் போது, மட்டக்களப்பு பிரதேச செயலாளர் வி.தவராசா மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர் எம்.மதிவண்ணன் உள்ளிட்ட பலர் பிரசன்னமாய் இருந்தனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .