Editorial / 2026 ஏப்ரல் 14 , மு.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்தில் நடைபெற்ற 8-வது ஆசியக் கிண்ணத் தகுதிகாண் ஹாக்கி போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று, வெள்ளிப் பதக்கத்துடன் இலங்கை ஹாக்கி அணி இன்று (14) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ஆசியக் கிண்ணத் தொடரில் விளையாடும் தகுதியையும் இலங்கை அணி உறுதி செய்துள்ளது.
ஆசியப் பிராந்தியத்தைச் சேர்ந்த 9 நாடுகளின் பங்கேற்புடன் தாய்லாந்தின் பெங்கொக் நகரில் இந்தப் போட்டித் தொடர் நடைபெற்றது.
இலங்கை ஹாக்கி வரலாற்றுச் சாதனையாக, முதல் முறையாக இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இந்தத் தொடரில் அணி பெற்றுக்கொண்டது.
சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, பலம் வாய்ந்த பங்களாதேஷ் ஹாக்கி அணியை மீண்டும் ஒருமுறை தோற்கடித்தமை இந்தத் தொடரின் சிறப்பம்சமாகும்.
தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து ஏர் ஏசியா (Air Asia) நிறுவனத்திற்குச் சொந்தமான FD-140 என்ற விமானம் மூலம் இன்று அதிகாலை 12.20 மணியளவில் அணி வீரர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
வெற்றிபெற்ற வீரர்களை வரவேற்பதற்காக இலங்கை ஹாக்கிச் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago