Editorial / 2018 செப்டெம்பர் 12 , மு.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கே. கண்ணன்

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கபடித் தொடரில், நெல்லியடி மத்திய கல்லூரி சம்பியனாகியது.


இது தவிர, குறித்த பிரிவின் முதல் மூன்று இடங்களையும் வட மாகாண பாடசாலைகளே கைப்பற்றின. நெல்லியடி மத்திய கல்லூரி சம்பியனானதுடன், இளவாலை கன்னியர் மடம் மகா வித்தியாலயம் இரண்டாமிடத்தைப் பெற்றதுடன், கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மூன்றாமிடத்தைப் பெற்றது.
கண்டி தியன உள்ளக விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில், இளவாலை கன்னியர் மடம் மகா வித்தியாலயத்தை எதிர்கொண்ட நெல்லியடி மத்திய கல்லூரி 37-19 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று சம்பியனாகியது.
இறுதிப் போட்டியின் சிறந்த வீராங்கனையாக நெல்லியடி மத்திய கல்லூரியின் நிகாலினி தெரிவானார்.
இதேவேளை, மூன்றாமிடத்துக்கான போட்டியில் மகாபலிபுரம் வித்தியாலயத்தை எதிர்கொண்ட கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, போட்டியின் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்தி 59-09 என்ற புள்ளிகள் கணக்கில் இலகுவாக வென்று மூன்றாமிடத்தைப் பெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .