Shanmugan Murugavel / 2024 ஜூலை 04 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.யூ.எம். சனூன்

புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் அமைப்பான "சோன்" அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட "க்லேஷ் ஒப் சஹீரியன்ஸ் சீசன் 5" கால்பந்தாட்டத் தொடரில் சீகோன் ரெட் (2015 சா/த, 2018 உ/த) அணி சம்பியனானது.
மொத்தமாக 40 பழைய மாணவர் சங்க அணிகள் பங்கேற்ற இத்தொடரின் பாடசாலை மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 5-0 என்ற கோல் கணக்கில் சஹீரியன்ஸ் 14 அணியை வென்றே சீகோன் ரெட் சம்பியனானது.
இத்தொடரில் சிறந்த கோல் காப்பாளராக பல்ஸ்ட் அணி வீரர் ஜப்ரிஸ் தெரிவானார்.
சம்பியனான சீகோன் ரெட் அணிக்கு 50,000 ரூபாய் ரொக்கப் பணமும், இரண்டாமிடம் பெற்ற சஹீரியன்ஸ் 14 அணிக்கு 30,000 ரூபாய் ரொக்கப் பணமும் வழங்கப்பட்டதோடு வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago