Shanmugan Murugavel / 2021 மார்ச் 16 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.எல்.எஸ். டீன்
அட்டாளைச்சேனை நியூ கிங்ஸ் அணியினரால் நடாத்தப்பட்ட கிரிக்கெட் மென்பந்தாட்டத் தொடரில், பொத்துவில் கிங்ஸ் அணி சம்பியனாகியது.
அட்டாளைச்சேனை தைக்காநகர் ஸஹ்றா வித்தியாலய மைதானத்தில் அண்மையில் இரண்டு நாட்கள் நடாத்தப்பட்ட, 16 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில், அட்டாளைச்சேனை பைனா அணியை வென்றே பொத்துவில் கிங்ஸ் சம்பியனாகியிருந்தது.
இறுதிப் போட்டியில், பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை தைக்காநகர் வட்டாரத் தலைவரும், தொழிலதிபருமான ஐ.எல்.எம் றபீக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கழகங்களுக்கு கிண்ணங்களையும், பணப்பரிசில்களுக்கான காசோலைகளையும் வழங்கி வைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .