Shanmugan Murugavel / 2025 ஜூலை 08 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ஏ.எல்.எம். ஷினாஸ்

அம்பாறை மாவட்டத்தின் ஏ தர கழகங்களுக்கிடையில் மாவட்ட கால்பந்தாட்ட லீக் நடாத்திய கால்பந்தாட்டத் தொடரில் கல்முனை பிறில்லியன்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.
கல்முனை ஐக்கிய சந்தாங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்ற 12 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் கல்முனை சனிமெளன்ட் விளையாட்டுக் கழகத்தை வென்றே பிறில்லியன்ஸ் சம்பியனானது.
சம்பியனான பிறில்லியன்ஸுக்கு 30,000 ரூபாய் பணப்பரிசு, வெற்றிக்கிண்ணம் என்பன அதிதிகளினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இரண்டாமிடத்தைப் பெற்ற சனிமெளன்ட்டுக்கு 20,000 ரூபாய் பணப்பரிசும் வெற்றி கிண்ணமும் வழங்கப்பட்டது. மூன்றாமிடத்தைப் பெற்றுக் கொண்ட மருதமுனை கோல்ட்மைன்ட் விளையாட்டு கழகத்துக்கு 10,000 ரூபாய் பணப் பரிசும் வெற்றிக் கிண்ணமும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.
6 hours ago
9 hours ago
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
10 Apr 2026