Shanmugan Murugavel / 2024 மே 20 , பி.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.ஆர். லெம்பேட்

சர்வதேச 'ரோலர் நெட்டெட் போல்' விளையாட்டின் 2024ஆம் ஆண்டு சர்வதேச ரீதியிலான நாடுகள் பங்குபற்றிய விளையாட்டுப் போட்டிகள் கம்பஹா விமான நிலைய விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.
குறித்த போட்டியில் பங்குபற்றிய இலங்கையணி ஒட்டுமொத்த விளையாட்டுப் போட்டிகளிலும் சம்பியனாகியிருந்தது. இதில் இலங்கையணி சார்பாக பங்குகொண்ட மன்னார் மாணவர், மாணவிகளுக்கு பாராட்டு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி தேசிய பாடசாலையில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்றது.
ரோல் போல் விளையாட்டானது இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டு முதல் முதலாக மன்னர் மாவட்டத்தில் விளையாட்டுக் குழு ஆரம்பிக்கப்பட்ட தாகவும் மன்னார் மாவட்ட விளையாட்டு வீரர்கள் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் சிறப்பாக விளையாடி வருவதாகவும் சர்வதேச ரோல் போல் விளையாட்டு எதிர்வரும் ஆண்டு மன்னாரில் நடைபெறவுள்ளதாகவும் இலங்கை ரோல் போல் சம்மேளனத்தின் செயலாளர் இதன்போது தெரிவித்தார்.
26 minute ago
36 minute ago
44 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
36 minute ago
44 minute ago
2 hours ago