Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 02 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ஏ.எல்.எம். ஷினாஸ்

மருதமுனை ஈஸ்டர்ன் யூத் விளையாட்டுக் கழகத்துக்கு ஒரு தொகுதி காலணிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு மருதமுனையில் ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெற்றது.
ஈஸ்டர்ன் விளையாட்டு கழகத்தின் பேரபிமானியும் முன்னாள் கழகத்தின் கோல் காப்பாளராகவும் வீரராகவும் விளையாடிய கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ஏ.எம்.எம். அன்சார் அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கழகத்திற்கு தேவையான ஒரு தொகுதி காலணிகளை அன்பளிப்பாக வழங்கி வைத்தார்.
இங்கு உரையாற்றிய அன்சார், “தற்போது என்னால் ஒரு சிறிய அளவிலான உதவி மாத்திரமே கழகத்துக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் முடியுமான அளவு கழகத்திற்கு பல்வேறு உதவிகளை வழங்குவதற்கு நான் தயாராக இருக்கின்றேன். எமது விளையாட்டு கழகம் கிழக்கில் பழம் பெரும் கழகங்களில் ஒன்றாகும். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சுற்றுப்போட்டி மற்றும் எதிர்காலங்களில் நடைபெற இருக்கின்ற சுற்றுப்போட்டிகளிலும் நமது கழகம் சிறப்பாக விளையாடி வெற்றியை தம்பசப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.
42 minute ago
4 hours ago
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
4 hours ago
02 Nov 2025
02 Nov 2025