Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை
R.Tharaniya / 2025 மே 28 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச ஐக்கிய யோகாசன சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற முதலாவது ஆசிய கிண்ண யோகாசன போட்டி ஞாயிற்றுக்கிழமை ( 25 ) அன்று திருகோணமலை மக்ஹெய்சர் விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.
International Union Yoga Federation(IUYF) அமைப்பின் தலைமையில், WSS Sports International மற்றும் பலயோகா அமைப்புகளுடன் இணைந்து, 1வது IUYF ஆசிய யோகா சாம்பியன்ஷிப் 2025 திருகோணமலையில் இடம்பெற்றது.
மொத்தம் 243 போட்டியாளர்கள் 5 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றனர். போட்டிகளுடன் கூடியபாரம்பரிய கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வின் விருந்தினராக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஷன்அக்மீமன அவர்கள் பங்கேற்றார்.
WSS Sports International (இந்தியா) இயக்குநர் லிங்கம் பூபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வின் தீம் போஸ்டர் வெளியிட்டார். நடுவராக பிரகாஷ், சுந்தரவேல், டாக்டர் சோந்தரி, மீனா லட்சுமி மற்றும் மரியமாலா ஆகியோர் செயல்பட்டனர்.
நிகழ்வுக்கு நிதியுதவியாக N2S Technology – India, GWR Global World Record,Kaleesuwari Foundation மற்றும் Ogam School of Yoga ஆகிய நிறுவனங்கள் பங்காற்றின.
இலங்கை IUYF தலைவர் ராம்கிஷன் மற்றும் IUYF மகளிர் பிரிவு தலைவர் கௌரி சாந்தி இவ் நிகழ்வை ஒருங்கிணைத்தனர். விழா நிறைவில் லிங்கம் பூபதி நன்றி உரையாற்றினார்.
அ . அச்சுதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago