Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூலை 31 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
திரு ,திருமதி பிரபாகர் தம்பதிகளின் புதல்வி செல்வி அனன்யா பிரபாகரின் பரதநாட்டிய அரங்கேற்றம் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் வெகுசிறப்பாக 2025 ஜூலை 27ஆம் திகதி அன்று நடைபெற்றது.
‘கலாசூரி’திருமதி வாசுகி ஜெகதீஸ்வரன் வழிகாட்டுதலின் கீழ் பயிற்சி பெற்ற அனன்யா, தனது கலை மீது கொண்டுள்ள அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்தை பிரதிபலிக்கும் விதமாக ஒரு சிறப்பான, அழகான நடன நிகழ்ச்சியை வழங்கினார்.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக டாக்டர் (திருமதி) கிருஷாந்தி ரவீந்திரா மற்றும் டாக்டர் தீபால் குணசேன ஆகியோர் கலந்து கொண்டனர்.
அனன்யாவின் கலைப் பயணத்தில் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்த இந்த நிகழ்வில், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பல்வேறு நலன் விரும்பிகள் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்ததுடன் நல்லாசிகளையும் வழங்கினார்கள்.
54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
1 hours ago