2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

3000 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் கையளிப்பு

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 24 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஏ.எம்.ஏ.பரீட்

கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 3000 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வு  நேற்றைய தினம்  (23) திருகோணமலை, மற்றும் கந்தளாய்  பிரதேசங்களில் இடம்பெற்றது

ஜெர்மன் முஸ்லிம் ஹெல்பன் நிறுவனத்தின் அனுசரணையோடு இடம்பெற்ற இந்நிகழ்வினை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வில் அம்மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்ஷன பாண்டி, கோரல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அதுக் கோரள,கந்தளாய் பிரதேச செயலாளர், முஸ்லிம் ஜெர்மன் ஹல்பன் நிறுவனத்தின் தலைவர் சாதிக் ஹசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .