2025 ஜூலை 03, வியாழக்கிழமை

ஏறாவூரில் குழு நியமனம்

Niroshini   / 2021 செப்டெம்பர் 13 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனமானது, ஏறாவூர் பிரதேசத்தில் இருந்து போதைப்பொருள் பாவனையை ஒழிப்பதற்கு பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றது.

அதன் ஓர் அங்கமாக, போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வு அளிப்பதற்காக, ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழுவின் தலைவராக எம்.ரீ.எம். அஸ்மீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், ஏ.பி.எத்.சபீர் செயலாளராகவும் குழு உறுப்பினர்களாக எம்.ஏம்.முஹைதீன், அல்ஹாபிழ் மௌலவி யூ.ஏ.றஹீம் (இஹ்ஸானி), ஜே. அஹமட்லெப்பை, ஏ. றியாஸ், ஜே.எம்.அஸீம் ஏ.ஜே. சாதிக், ஏ.எல்.எம்.முனீர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .