Freelancer / 2021 ஒக்டோபர் 24 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன், வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் இன்று (24) காலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த ஒருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
கல்லடி, சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்துக்கு முன்னால் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அக்கரைப்பற்றில் இருந்து மட்டக்களப்பை நோக்கிவந்த பஸ், நாவற்குடா பிரதான வீதியில் உள்ள யு வளைவில் மோட்டார் சைக்கிளை திருப்ப முனைந்தவர் மீது மோதியுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்தவரை மோதிய பஸ் சிறிது தூரம் இழுத்துச்சென்றதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
இந்த விபத்தின்போது மோட்டார் சைக்கிளில் முழுமையாக சேதடைந்துள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
நொச்சிமுனையை சேர்ந்த சிவசம்பு சிவநேசதுரை என்னும் 70 வயதுடைய ஓய்வுபெற்ற அதிபர் ஒருவரே படுகாயமடைந்துள்ளார்.
இது தொடர்பில் பஸ் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Apr 2026