Editorial / 2026 ஏப்ரல் 20 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

அ. அச்சுதன்
திருகோணமலை, கப்பல்துறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (19) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வேனும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த எஸ். நிரோஜன் (36) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஜீவராணி (47) என்பவரின் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
8 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago