2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

மாணவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு

Janu   / 2023 ஓகஸ்ட் 21 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவை உடைய 15 பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு அவர்களின் கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொள்வதற்காக கல்வி ஊக்குவிப்பு கொடுப்பனவு கல்முனை தாராள உள்ளங்கள் அறக்கட்டளை அமைப்பினால் மாதாந்த கொடுப்பனவு ஞாயிற்றுக்கிழமை(20) வழங்கப்பட்டன.

இந்நிகழ்வு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது. சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.சந்திரகுமார் பிரதம அதிதியாகவும், சிறப்பு அதிதியாக நன்கொடையாளரும் தாராள உள்ளங்கள் அறக்கட்டளையின் மகளீர் பிரிவு தலைவியுமான திருமதி.ஷரேன் பியுமி(பிரான்ஸ்) ஆகியோர்  கலந்து கொண்டனர்.

பாறுக் ஷிஹான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X