2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

விவசாயிகளுக்கு சிறப்பு வேலைத் திட்டம்

Ilango Bharathy   / 2021 ஜூலை 20 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ்

சேதனப் பசளை மற்றும் இயற்கை பீடை நாசினியை பயன்படுத்துவதன் மூலம் எதிர்கால சந்ததிகளுக்கு நஞ்சற்ற உணவு உற்பத்தியை மேற்கொள்ளும் ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்துக்கு அமைய, அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தால் இந்த வேலைத்திட்டங்கள்
முன்னெடுக்கப்படுகின்றன. இதன்படி, சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் சம்மாந்துறை மேற்கு விவசாய விரிவாக்கல் பிரிவினால் மலையடிக் கிராமத்தில், விவசாய போதனாசிரியர்
எம்.ரி.பஸ்லுனா தலைமையிலான வேலைத்திட்டமொன்று, நேற்று முன்தினம்
(18) நடைபெற்றது.

இதன்போது, மண்புழுக்களைப் பயன்படுத்தி சேதன உரம் தயாரிக்கும் முறை, குறுகிய காலத்தில் கூடுதலான உற்பத்திகளை மேற்கொள்ளும் பயிர்ச்செய்கை முறைகள் சம்பந்தமாகவும் விவசாயிகளுக்கு செய்முறை பயிற்சி நடைபெற்றது.



இச்செயல்முறை பயிற்சி வகுப்பில் சம்மாந்துறை வலய உதவி விவசாய பணிப்பாளர் எஸ். எல். எம் .சல்மான் பாடவிதான உத்தியோகத்தர் ஜீ.குணநீதராசா,  பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட விவசாயிகள் பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .