Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 நவம்பர் 02 , மு.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமூகவலைத்தளத்தை பயன்படுத்தாதவர்கள் தற்போது இல்லை என்றுதான கூறவேண்டும். ஆனால், இந்த சமூகவலைத்தளத்தை பயன்படுத்துவதற்கு சிலர் பயன்படுத்தும் கடவுச்சொல் (Password) இருக்கே, அப்பப்பா ரொம்ப பெருசா பில்டப் காட்டுவாங்க.
123456, இதுதான் உலகில் அதிகமாக பயன்படுத்தப்படும் கடவுச்சொல் என்றால் நீங்கள் நம்புவீர்களா?. அடுத்த இடத்தில் Password என்ற சொல்லை பல அதிபுத்திசாலிகள் கடவுக்சொல்லாக வைத்துக்கொண்டு திரிகின்றனராம்.
நிலைமை இப்படி இருக்கும்போது, அடுத்தவனின் சமூவலைத்தளம் ஒன்றை ஹேக் செய்வதையே முழுநேர தொழிலாக பலர் செய்து வருகிறார்கள்.
இதனால் வங்கி கணக்கு எண்கள், கடனட்டை எண்கள் போன்ற முக்கிய தகவல்கள் அடிக்கடி திருடப்படுகிறது. இந்த பிரச்சினையை அமெரிக்க டொலர் 2இல் தீர்க்க முடியுமாம்.
ஆம், அமெரிக்கவின் நியூயோர்க் நகரத்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி மாணவியான மிரா (வயது 11) எளிதில் உடைக்க முடியாத கடவுச்சொற்களை அமெரிக்க டொலர் 2க்கு விற்பனை செய்து வருகின்றாராம்.
அவர் பயன்படுத்தும் வழிமுறை இதுதான்:
நீங்கள் ஐந்து பகடை காய்களை உருட்டும்போது, 5 எண்கள் கிடைக்கும் உதாரணத்துக்கு 13465 என்று வருகிறது என்றால், இந்த எண்களுக்கு டைஸ் வார்த்தை பட்டியலில் (Diceware word list) இருக்கும் ஆங்கில வார்த்தை Beach. உங்களுக்கு கொஞ்சம் கடினமான கடவுச்சொல் வேண்டுமானால் 6 டைஸ்களை உருட்டுங்கள். இல்லை உங்களுக்கு உளவு நிறுவனங்களால் கூட உடைக்க முடியாத கடவுச்சொல் வேண்டும் என்றால் 7 டைஸ்களை உருட்டுங்கள். 7 டைஸ்கள் மூலம் கிடைக்கும் கடவுச்சொல்லை, 2030ஆம் ஆண்டு வரை உடைக்க முடியாதாம்.
இந்த எளிய வழிமுறையை பயன்படுத்திதான் மிரா கடவுச்சொல்லை உருவாக்கி விற்பனை செய்து இளம் தொழிலதிபராக முன்னேறுவதற்கு அமெரிக்காவை கலக்கி வருகின்றாராம்.
(குறிப்பு: Diceware word list என்றால், ஐந்து பகடைகளை ஒரு முறை உருட்டும் போது, உருவாகின்ற ஒரு வார்த்தையாகும்.)
1 hours ago
30 Aug 2025
30 Aug 2025
A.F SUHAINA Tuesday, 03 November 2015 09:13 AM
. Daughter.Neengal menmalum valaranthu sathany padaiyungal
Reply : 0 0
neppoliyan Wednesday, 04 November 2015 05:19 PM
super
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
30 Aug 2025
30 Aug 2025