Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 12 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
தனது திருமண வைபவத்துக்காக, 3.2 கிலொமீற்றர் நீளமான சாரித்தலைப்பை அணிந்து, கண்டியைச் சேர்ந்த பெண்ணொருவர் கின்னஸ் சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
ருவன் புஷ்பகுமார-சஜனி பிரயங்கிகாக ஆகிய இருவரும் நேற்று திருமண பந்தத்தில் இணைந்துகொண்டனர்.
இந்நிலையில், சஜனி பிரியங்கிகா தனது திருமண வைபவத்தில் புதிய சாதனையொன்றை நிலைநாட்ட வேண்டுமென்பதற்காக, உலகில் மிக நீளமான சாரித்தலைப்பை அணிந்து சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
அவர் அணிந்திருந்த சாரித்தலைபானது 3.2 கிலோமீற்றர் நீளமுடையது என தெரியவருகிறது.
கண்டி-உடரட்ட பாணியில் நடைபெற்ற இத்திருமண வைபவத்தில், பிரதம அதிதியாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வு, கண்டி, பேராதனை - கன்னொருவா வீதியில் இடம்பெற்றது. லொறி ஒன்றில் கொண்டுவரப்பட்ட 3.2 கிலோமீற்றர் நீளமான சாரித்தலைப்பை விரிப்பதற்கு, பாதை நெடிகிலும் சுமார் 250க்கும் மேற்பட்ட சிறுவர்கள் அமர்த்தப்பட்டனர்
கின்னஸ் சாதனைக்கான மத்தியஸ்தர்கள் சமூகமளித்து நிலைமையை பதிவு செய்தனர். கெடம்பை சந்தியில் இருந்து ஈரியகம சந்தி வரை சாரித்ததலைப்பு நீண்டு காணப்பட்டது.
இதற்கான சாரியை மாலா சாரி நிறுவனத்தின் சார்பாக மஞ்சுல திலரத்ன வழங்கி இருந்தார்.
சிகை அலங்காரம் மற்றும் மணப் பெண் அலங்கரிப்புப் பணிகளை, சீன வடிவமைப்புத் துறைக் கலைஞரான இந்ரமாலா ராஜபக்ஷ மேற்கொண்டிரந்தார்.
மணப்பெண்ணினது மலர் சிறுமிகளாக (பிளவர் கேள்) 40 பேர் அமர்த்தப்பட்டிருந்தனர்.
இதற்கு முன் இந்தியாவைச் சேர்ந்த மணப் பெண் ஒருவர் 2.8 கிலோமீட்டர் நீளமான சாரியை அணிந்தி சாதனையை நிலைநைாட்டியிருந்தமை இருந்தமை குறிப்பிடத்தக்கது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago