A.P.Mathan / 2012 நவம்பர் 05 , மு.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை தமிழர் பிரச்சினையில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அதிரடி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அங்குள்ள தமிழர்களுக்கு தனி ஈழமே தீர்வு என்று பேசி வந்த தி.மு.க. இப்போது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே ஒப்பந்தத்தை வலியுறுத்திப் பேசி வருகிறது. இந்தியாவிற்கும்- இலங்கைக்கும் இடையே 1987இல் போடப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொண்டு வரப்பட்ட இலங்கையின் 13ஆவது அரசியல் சட்டத் திருத்தம் பற்றி குரல் எழுப்புகிறது. கடந்த ஓகஸ்ட் 12ஆம் திகதி தி.மு.க. டெசோ மாநாட்டை சென்னையில் நடத்தியது. அக்கூட்டத்திற்கு முன்பு நடைபெறுவதாக இருந்த "கருத்தரங்கு" விவாதத்திற்கான அஜெண்டாக்களில் அந்த 13ஆவது அரசியல் சட்ட திருத்தம் பற்றி குறிப்பிடவில்லை. பிறகு டெசோ மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த தீர்மானங்களில் ஒன்று கூட இலங்கை அரசின் 13ஆவது சட்டத்திருத்தம் பற்றி சுட்டிக்காட்டவில்லை. ஏனென்றால் அந்த அதிகாரப் பகிர்வை தி.மு.க. மனதார ஒப்புக்கொள்ளாத மனநிலையிலேயே கடந்த காலத்திலிருந்து இருந்து வருகிறது. அதனால்தான் அடிக்கடி தமிழ் ஈழம் பற்றி பேசும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, திடீரென்று ஒருமுறை "கொசோவா, தெற்கு சூடான், தைமூர்" போல் தமிழர்களுக்கும் தனி ஈழம் வேண்டும் என்றெல்லாம் கோரிக்கை வைத்து, அதை இந்திய அரசே, "அது தி.மு.க.வின் கருத்து" என்று கூறி கைகழுவிவிட்டது. இவ்வளவு சீரியஸாக இருந்த தி.மு.க. இப்போது திடீரென்று 13ஆவது அரசியல் சட்டதிருத்தத்தின் மீது அக்கறை காட்டுகிறது.5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago