A.P.Mathan / 2012 நவம்பர் 02 , மு.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேசுவதற்கு முன்னாள் விடுதலை புலிகள் இயக்க தலைவர் 'கேபி' என அறியப்படும் குமரன் பத்மநாதனின் உதவியை பெறப்போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெலவின் இந்த அறிவிப்பு எத்தனை தூரம் சாத்தியமானது, எந்தவித பயன் அளிப்பது என்பது குறித்த சந்தேகங்கள் உடனுக்குடனேயே எழுந்து விட்டன. அதைவிட முக்கியமாக, 'கேபி' குறித்த அரசின் இந்த அறிவிப்பு திடீரென்று தோன்றியது போலவே காணாமலும் போய்விட்டதோ என்று ஒரு வார காலத்திற்குள்ளேயே எண்ணத் தோன்றுகிறது.
அந்த விதத்தில், இனப்போர் முடிவுக்கு வந்த பின்னர், விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவராக கேபி, தன்னையே பிரகடனப்படுத்திக் கொண்டது பெரும்பாலும் கண்டு கொள்ளப்படவில்லை. இன்னும் சொல்லப் போனால், விடுதலை புலிகள் இயக்கம் மீண்டும் உயிர்த்தெழும் என்ற எண்ணமோ, நம்பிக்கையோ தமிழ் மக்களிடையே இருக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், இலங்கையில் வாழும் தமிழ் மக்களில் பெரும்பாலரும் புலம்பெயர்ந்தோரில் கணிசமான ஒரு பகுதியினரும் அவ்வாறு ஒரு நிலைமை உருவாவதை கூட விரும்பவில்லை. 5 hours ago
9 hours ago
Rahmath ali Monday, 05 November 2012 04:32 AM
அரசாங்கம் புலிப்பயங்கரவாதத்தை ஒழித்ததாகக் கூறுகின்றது. ஆனால் அரசாங்க ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்களும் அவர்களை 'விடுதலைப் புலிகள்' என்றே குறிப்பிடுகின்றன. நீங்களும் அவ்வாறே குறிப்பிட்டுள்ளீர்கள். எது சரியானது? அவர்கள் விடுதலைப் புலிகளாயின் அவர்கள் விடுதலைக்காக அப்பாவி மக்களைக் கொன்று குவித்ததையும் அவர்களைப் போல இன்னொரு சிறுபான்மை இனத்தை இன சம்ஹாரம் செய்ததையும் தவிர வேறு என்ன செய்தார்கள்? எனவே அவர்களை உண்மையான பெயர் கொண்டே அழையுங்கள்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago