2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

‘நிலைப்பாடு கைகூடும்’

Niroshini   / 2017 பெப்ரவரி 13 , மு.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஸன்  

“தனியார் காணிகளிலிருந்து படையினர் வெளியேறி, அரச காணிகளுக்குச் செல்ல வேண்டுமென்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு” எனத் தெரிவித்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், “அரசாங்கத்தின் நிலைப்பாடு கைகூடுமென எதிர்பார்க்கிறேன்” எனவும் குறிப்பிட்டார்.  

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவில் மக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போராட்டம் தொடர்பாகக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கேப்பாப்புலவில் மக்கள், தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக யாழிலும் போராட்டம் நடைபெற்றிருக்கிறது. இந்த மக்களின் போராட்டம் குறித்து, நாங்கள் நாடாளுமன்றத்திலும் ஒத்திவைப்புவேளை பிரேரணையை கொண்டு வந்திருந்தோம். 243 ஏக்கர் விடுவிக்கப்பட்டதாக இதன்போது கூறப்பட்டதை அமைச்சர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அத்துடன் சில பகுதிகள் விடுவிக்கப்படும் எனவும் கூறினார்கள்.  

விடுவிக்கப்பட இருக்கிற பகுதி, விமானப்படை இருக்கிற பிரதேசமல்ல. அது இராணுவம் இருக்கிற இன்னுமொரு பிரதேசமாகும். அதைத் தவறாக மக்கள் புரிந்து விட்டார்கள் என்ற கருத்தையும் அமைச்சர்கள் கூறினார்கள். அப்படி இருந்த போதும் விமானப்படை வைத்திருக்கும் பகுதியையும் விடுவிக்க, அவர்களோடு பேசி, ஓர் இணக்கப்பாட்டுக்கு வர முடிந்திருக்கும்” என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X