2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

‘நல்லாட்சியில் பிளவு’

Kogilavani   / 2017 ஜனவரி 27 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிரோஷினி   

“மத்திய வங்கி விவகாரத்தினால், நல்லாட்சி அரசாங்கத்துக்குள் பிளவு ஏற்பட்டுவிட்டது” என, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.   

மேலும், “பிணைமுறி மோசடி இடம்பெற்றதன் பின்னர், குறித்த நிறுவனத்தினால் வாங்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட வங்கிக் கணக்குகள் அனைத்தையும், தற்காலிகமாக செயலிழக்கச் செய்யவேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.  

பொரளையில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,   

 “அரசாங்கத்தில் உள்ள ஒருதரப்பினர், பிணைமுறி விவகாரத்தில் பாரிய மோசடி ஏற்பட்டுள்ளது என ஒத்துக்கொண்டுள்ள அதேவேளை, மறுதரப்பு அதனை மறுத்து வருகிறது. மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரத்தில், பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதை, ஆரம்பம் முதல் ஒன்றிணைந்த எதிரணியினர் தெரிவித்து வந்தனர். தற்போது, கோப்குழு உட்பட பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய வங்கியில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதை இனங்கண்டுள்ளனர்.  

பிணைமுறி விவகாரத்தில் மோசடியொன்று இடம்பெற்றிருப்பதை நம்புவதாலேயே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விசாரணைக்கென ஆணைக்குழுவொன்றையும் அமைத்துள்ளார். எனவே, இந்த விசாரணைகள் முடியும் வரை, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவேண்டும்” என்று, அவர் மேலும் கூறினார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .