J.A. George / 2021 மே 05 , மு.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் மேலும் 4 மாவட்டங்களைச் சேர்ந்த 12 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தின் மஹரகம பொலிஸ் பிரிவில் பமுனுவ கிராம சேவகர் பிரிவு, பிலியந்தலை பொலிஸ் பிரிவில் ஹொன்னத்தர மற்றும் தல்தர ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.
அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் கிரிந்திவெல பொலிஸ் பிரிவில் குட்டிவில கிராம சேவகர் பிரிவு, இரத்தினப்புரி மாவட்டத்தில் எம்பிலிபிட்டியபொலிஸ் பிரிவில் பல்லேகம, உடகம, புதிய நகரம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.
அத்துடன் பணாமுர பொலிஸ் பிரிவில் வலல்கொட, சுதுகல, பணாமுர ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் வேவல்வத்த பொலிஸ் பிரிவில் ரத்கம கிராம சேவகர் பிரிவு என்பன முடக்கப்பட்டுள்ளன.
மேலும், வவுனியா மாவட்டத்தில் பூவரசங்குளம் பொலிஸ் பிரிவில் குருக்கள் புதுக்குளம் கிராம சேவகர் பிரிவும் முடக்கப்பட்டுள்ளன அறிவிக்கப்பட்டுள்ளது.
24 minute ago
27 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
27 minute ago
1 hours ago
1 hours ago