Freelancer / 2021 ஜூலை 18 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குபடுத்துகைகள் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமான அறிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள 60 வயது, 30 வயது மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றப்படும் என்றும் திட்டத்தின் படி 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றுவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தடுப்பூசிகளுக்கான நிதியொதுக்கீட்டில் அரசாங்கம் அக்கறை செலுத்தவில்லை என்று கூறப்படுவதாகவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதிக்கமைய அபிவிருத்தியடைந்த நாடுகள் பின்பற்றும் செயல்முறைகளையே பின்பற்றி வருவதாகக் குறிப்பிட்ட அவர், தடுப்பூசி ஏற்றலின் மூலம் அரசாங்கம் எவ்வித சுயலாபத்தையும் எதிர்பார்க்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
14 minute ago
46 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
46 minute ago
54 minute ago