Editorial / 2019 ஒக்டோபர் 21 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, ஐயாயிரத்துக்கும் அதிகமானோரை பெப்ரல் அமைப்பு ஈடுபடுத்தவுள்ளதாக
அதன் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
கண்காணிப்பாளர்களுக்கான பயிற்சிகளை ஓரிரு நாட்களில் நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 2 ஆயிரம் கண்காணிப்பார்களை ஈடுபடுத்தவுள்ளதாக தேசிய தேர்தல்கள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.
கெபே அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி 7 ஆயிரத்து 500 கண்காணிப்பாளர்கள், கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக கெபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் அஹமட் மனாஸ் கூறியுள்ளார்.
இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தல் கணக்காணிப்பு பணிகளுக்காக 14 ஆயிரத்துக்கும் அதிகமான கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
7 hours ago
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
12 Apr 2026