2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

164 சுற்றுலாப் பயணிகள் வருகை

J.A. George   / 2021 பெப்ரவரி 13 , பி.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கஸகஸ்தானின் அல் மார்டி விமான நிலையத்திலிருந்து இன்று காலை ஹம்பாந்தோட்டை மத்தளை சர்வதேச விமான நிலையத்தை மற்றொரு விமானம் வந்தடைந்தது.

இந்த விமானத்தில் 164 சுற்றுலாப் பயணிகள் இலங்கையை வந்தடைந்தனர்.

சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்றிட்டத்தின் கீழ் இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

நாட்டில் தங்கியுள்ள 118 சுற்றுலாப் பயணிகள் இந்த விமானத்தில் திரும்பிச் செல்லவுள்ளனர்.

இந்தத் திட்டத்தின் கீழ் கஸகஸ்தானிலிருந்து இலங்கைக்கு வந்த மூன்றாவது விமானம் இதுவாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .