2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

1977 சிப்பிகளுடன் ஒருவர் கைது

Editorial   / 2021 ஜனவரி 15 , மு.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரொமேஷ் மதுசங்க 
மன்னார் பஸ் தரிப்பிடத்துக்கு அண்மையிலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1977 சிப்பிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன், சந்தேகநபர் ஒருவரையும் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். 

மன்னார் விசேட அதிரடிப்படை பொலிஸ் முகாம் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே, அந்த வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 

எவ்விதமான அனுமதிப்பத்திரமும் இன்றி, மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்தச் சிப்பிகளின் பெறுமதி, மூன்று இலட்சம் ரூபாயாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்டவர் மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளுக்காக கைப்பற்றப்பட்ட சிப்பிகளுடன் அவர், மன்னார் மீன்வள மற்றும் நீரியல்வள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்றனர்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .