Editorial / 2026 ஏப்ரல் 15 , பி.ப. 01:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரொசேரியன் லெம்பட்
மன்னார் கடல் பகுதியில் இன்று (15) புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற கோரப் படகு விபத்தில் மீனவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இரண்டு மீன்பிடிப் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
மன்னார் வங்காலைப்பாடு கடல் பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த இரண்டு படகுகள் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளாகின.
வங்காலைப்பாடு பகுதியைச் சேர்ந்த ஒரு மீனவரின் படகும், காட்டாஸ்பத்திரி பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு மீனவரின் படகுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த மோதலில் இரண்டு படகுகளும் பலத்த சேதமடைந்த நிலையில், அவற்றில் இருந்த மீனவர்கள் கடலில் தூக்கி வீசப்பட்டனர்.
விபத்தின் போது ஒரு மீனவர் கடலில் மூழ்கிக் காணாமல் போனார். அருகில் இருந்த சக மீனவர்கள் நீண்ட நேரம் முன்னெடுத்த தீவிர தேடுதல் நடவடிக்கையின் பலனாக, குறித்த மீனவர் சடலமாக மீட்கப்பட்டார்.
உயிரிழந்தவர் காட்டாஸ்பத்திரி பகுதியைச் சேர்ந்த மீனவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்த வங்காலைப்பாடு பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு மீனவர், சிகிச்சைக்காக மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாகத் தகவல் அறிந்த பொலிஸாரும், மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
தொழிலுக்குச் சென்ற இடத்தில் நேர்ந்த இந்தத் துயரச் சம்பவம் மன்னார் மீனவ சமூகத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago