Freelancer / 2026 மார்ச் 31 , மு.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் தி.மு.க. கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. அதன்படி, கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று மனுத்தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் இருந்தனர். கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து 4 ஆவது முறையாக ஸ்டாலின் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கருத்து தெரிவிக்கையில்,
கொளத்தூர் தொகுதியில் கடந்த 3 முறை இருந்ததைவிட அதிகளவிலான ஆதரவை இப்போது கண்கூடாகப் பார்க்கிறேன். தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகு தி.மு.க. கூட்டணி 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
தி.மு.க. மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். எனவே எங்களுக்கு பெரிய அளவில் ஆதரவு கிடைத்திருக்கிறது. இம்முறை அமோகமான வாக்கு வித்தியாசத்தில் நான்காவது முறையாகவும் கொளத்தூர் மக்கள் என்னை வெற்றிபெற வைப்பார்கள். தமிழகம் முழுவதும் எங்கள் பிரச்சாரம் எப்போதும் போல் வலுவாக இருக்கும் என்றார். (a)

4 hours ago
8 hours ago
31 Mar 2026
31 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
31 Mar 2026
31 Mar 2026