Gavitha / 2017 ஏப்ரல் 10 , பி.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரட்டைக் குடியுரிமை தொடர்பில் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருந்த 24ஆயிரம் பேருக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக, குடிவரவு-குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த மாதம் 28ஆம் திகதி இன்னும் 1,500 பேருக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படும் என, அந்த திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடவடிக்கை கடந்த அரசாங்கத்தால் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
இதன்காரணமாக 2015ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் அதிகளவிலான விண்ணப்பப்பத்திரங்கள் தேங்கியிருந்ததாக அந்தத் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதற்கமைய 2015ஆம் ஆண்டு முதல் புதிய அரசாங்கத்தின் கீழ், இந்த விண்ணப்பப் பத்திரங்கள் தொடர்பில் ஆராய்ந்து இரட்டைக் குடியுரிமை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டமையால், தற்போது மிகவும் குறைந்தளவிலான விண்ணப்பங்களே காணப்படுகின்றன.
அத்துடன் எந்தவொரு விண்ணப்பப் பத்திரத்துக்கும் இரட்டை குடியுரிமை பெற்றுக்கொடுப்பதற்கு 3 மாதங்கள் தேவைப்படுவதாக அந்த திணைக்களத்தின் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த விண்ணப்பதாரியிடம் கட்டணமாக 3 இலட்சம் ரூபாய் பெற்றுக்கொள்ளப்படுவதுடன், அவரது குடும்ப உறுப்பினர்களுக்காக தல 50 ஆயிரம் ரூபாய் அறவிடப்படுகிறது.
2 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago