J.A. George / 2021 மே 11 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
உடன் அமுலாகும் வகையில் 4 மாவட்டங்களின் 6 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
மாத்தறை மாவட்டத்தின் மாத்தறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உயன்வத்த, உயன்வத்த வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் கண்டி மாவட்டத்தின் கடுகண்ணாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வலகம்பாய கிராம சேவகர் பிரிவில் கொஸ்கஸ்தன்ன பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
மாத்தளை மாவட்டத்தின் ரத்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடஹவிட்ட கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
புத்தளம் மாவட்டத்தின் கொஸ்வத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மெதகிரியான கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, குருநாகல் மாவட்டத்தின் கும்புக்கெட்டே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரிவுக்குட்பட்ட நிகதலுபொத கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago