Freelancer / 2023 டிசெம்பர் 02 , பி.ப. 08:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னாரைச் சேர்ந்த 2 குடும்பத்தின் 7 பேர் படகு மூலம் நேற்று(01) தனுஷ்கோடி அடுத்துள்ள மூன்றாம் மணல் திட்டில் சென்று இறங்கியுள்ளனர்.
தகவல் அறிந்த ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் அவர்களை மீட்டு முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைத்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தாங்கள் இரண்டு படகுகள் மூலம் தனுஷ்கோடிக்கு வந்ததாக தெரிவித்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக இன்று வரை 295 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்குச் சென்று மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. R
42 minute ago
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
14 Apr 2026