Editorial / 2026 ஏப்ரல் 13 , மு.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

மதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் முகத்தில், கூட்டத்திலிருந்து வீசப்பட்ட செல்போன் ஒன்று பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிடும் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் திருமாறனை ஆதரித்து வாக்களிக்க அண்ணாமலை வருகை தந்தார்.
திருப்பத்தூர் பேருந்து நிலையம் முன்பாகப் பிரச்சார வாகனத்தில் அவர் வந்தபோது, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர் மாலைகளை அணிவித்தும், பூக்களைத் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, கூட்டத்திலிருந்து வீசப்பட்ட பூக்களுடன் சேர்ந்து செல்போன் ஒன்றும் பறந்து வந்து அண்ணாமலையின் முகத்தில் பலமாகப் பட்டது. பின்னர் அந்த போன் பிரச்சார வாகனத்தின் முன்பகுதியில் விழுந்தது.
முகம் சுளிக்க வைக்கும் இச்சம்பவத்தால் அருகில் இருந்த வேட்பாளர் திருமாறன் அதிர்ச்சியடைந்தார். ஆனால், அண்ணாமலை சற்றும் பதற்றமடையாமல் சிரித்த முகத்துடன் கீழே விழுந்த செல்போனைத் தேடி எடுத்து, அதை வீசிய நபரிடமே ஒப்படைத்தார். மேலும், அந்த நபரைப் பார்த்து 'ஓகே' என்று கட்டைவிரலை உயர்த்திக் காட்டி (Thumbs Up), வேட்பாளரையும் தட்டிக்கொடுத்து அமைதிப்படுத்தினார். இந்தச் செயல் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
முன்னதாக, கோவை வடக்குத் தொகுதியில் வானதி சீனிவாசனை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த அண்ணாமலை, நல்லாம்பாளையம் பகுதியில் உள்ள சிப்ஸ் கடை ஒன்றில் இயந்திரத்தைப் பயன்படுத்தி முறுக்கு பிழிந்து, வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்தார். அவர் முறுக்குச் சுட்டு ஓட்டு சேகரித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
34 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
50 minute ago
1 hours ago