2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

’அமைச்சரவையில் ஊழல் செய்தோர் உள்ளனர்’

Editorial   / 2018 டிசெம்பர் 22 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தற்போது நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்களில் பெரும்பாலானோர், ஊழல் மோசடிகளில் ஈடுபட்டனர் என, ஐக்கயி மக்கள் சுதந்திர முன்னணியின் எம்.பி ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோருக்கு எதிராக துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் பல முன்வைக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சரவையில் நேர்மையற்ற நபர்களே பட்டியல்படுத்தப்பட்டுள்ளனர் என்பதை சுட்டிக்காட்ட முடியும் என்றும் அவர் கூறினார்.

இவர்கள் அனைவருக்கும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளனரா என்பதை அறியாமலேயே, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் தொடர்பான பட்டியலை, ஒருமுறைக்கூட பரிசீலிக்காது, ஜனாதிபதி, அவர்களுக்கான நியமனங்கள் வழங்கியுள்ளார் என்றும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X