Editorial / 2025 டிசெம்பர் 12 , மு.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
அயலகத் தமிழர் தினம் 2026 ஜனவரி மாதம் 11,12 ஆம் திகதிகளில் சென்னை வர்த்தக மையம்,நந்தம்பாக்கம், சென்னையில் நடைபெற உள்ளது.

நிகழ்வு பற்றி பர்மாவில் பிறந்து தாய்லாந்தில் வசிக்கும் தீபா ராணியின் மனப்பதிவுகள். . ,
"நான் உங்கள் தீபா ராணி நான் பர்மா தமிழ் பெண். ஆனால் தற்போது தாய்லாந்தில் இருக்கின்றேன். நான் தமிழ்நாட்டில் பிறக்கவில்லை, ஆனால் எனது பாட்டன் முப்பாட்டனின் ஆணிவேர் தமிழ்நாடு தான்.

என்னதான் நாம் தொழிலுக்காக வெளிநாட்டுக்கு வந்தாலும் எங்கள் மனதில் தமிழ் மண்ணின் உணர்வு தான் மேலோங்கி இருக்கும். தமிழ் மொழி மட்டுமல்ல நாங்கள் யார் என்று அடையாளம் மற்றும் கலாசாரம் சேர்த்தது தான் தமிழ்.

இவ்வாறு தமிழுணர்வு மிக்கோரை ஒன்றிணைத்து தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ள விழா தான் அ தமிழ் தின விழா 2026 இந்த விழாவில்அவர்களின் ஆணிவேர் தமிழ்நாடு தான். தமிழர்களின் பாட்டன் முப்பாட்டன் வாழ்ந்த இடம் தமிழகம் தான்.

தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் மனது முழுவதும் தமிழக எண்ணம் தான் மேலோங்கி இருக்கும். தமிழ் எங்களுக்கு மொழி மட்டுமல்ல. நாம் யார் என்று அடையாளம் கலாச்சாரம் எல்லாம் சேர்ந்தது தான் தமிழ். இவ்வாறான தமிழ் உணர்வுகளைக் கொண்ட அனைவரும் தமிழ்நாடு அரசும் இணைந்து நடத்தும் விழா தான் அயலகத் தமிழர் தின விழா 2026.

இவ் விழாவில் நாம் தமிழ் கலாசார பண்பாடுகளைப் பற்றி கற்றுக் கொள்ளலாம். மயிலாட்டம், தப்பாட்டம், கரகாட்டம் போன்ற தமிழ் கலைகள் மற்றும் கலாச்சாரம் குறித்த நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இது எமக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான சந்தர்ப்பமாக அமையும். ஆகவே அனைவரும் வாருங்கள். தமிழால் பேசுவோம் தமிழை கொண்டாடுவோம்." எனத் தெரிவித்தார்.
தொகுப்பு:எச்.எச்.விக்கிரமசிங்க

10 minute ago
19 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
19 minute ago
31 minute ago