Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 பெப்ரவரி 22 , மு.ப. 08:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகன் கனகராஜ்
இரவோடு இரவாக விவாதம் நடத்தப்பட்டு, பிரதம நீதியரசரொருவர் மறுநாள் காலையிலேயே வீட்டுக்கு விரட்டப்பட்டார். மற்றுமொருவர், ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று, தன்னுடைய மனைவியுடன் ஜனாதிபதி மாளிகையில் இருந்தாரெனச் சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அரசமைப்புப் பேரவையை, கால்பந்தாக்கிவிட வேண்டாமெனக் கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற அரசமைப்புப் பேரவை தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், அரசமைப்புப் பேரவையை, மிகவும் முக்கியமான ஒன்றாகத் தான் கருதுவதாகவும் இதனை நாம் மதிக்கவும் பாதுகாக்கவும் வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டதோடு, அரசமைப்புப் பேரவையில் நியமிக்கப்பட்டுள்ள உறுபினர்களைத் தாம் மதிக்கின்ற நிலையில், நியமிக்கப்பட்டுள்ள நபர்கள் நேர்மையாகவும் நேர்த்தியாகவும் சுயாதீனமாகவும் இருக்க வேண்டுமென்றே தாம் கருதுவதாகவும் கூறினார்.
அவ்வாறான நபர்கள் இருப்பதால்தான், நாட்டின் நீதி, சுயாதீனம் சரியாக முன்னகரும். அதேபோல், ஜனாதிபதியின் சிபாரிசுகள் குறித்து நாம் கவனித்தோம். அவருடன் மிகவும் நெருக்கமான ரீதியில் செயற்பட்டு வந்தோம். அரசமைப்புப் பேரவைக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நல்ல உறவுமுறை இருந்தது என்றும், சம்பந்தன் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவராகத் தானிருந்த போது, ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த உறுப்பினரொருவரை, அரசமைப்புப் பேரவைக்கு நியமிக்குமாறு, தானே பரிந்துரைத்ததாகத் தெரிவித்த சம்பந்தன் எம்.பி, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைவரதும் அங்கிகாரம் வேண்டுமென்ற நோக்கமே அதுவாகும் என்றும், அவ்வாறு இருக்கையில், அரசமைப்புப் பேரவையைத் தொடர்ச்சியாகக் குழப்புவது, மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.
அரசமைப்பு பேரவை, இன்று மிகவும் ஆரோக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது. சட்ட சுயாதீனத்தை உறுதிப்படுத்தி வருகின்றன்றே தாம் கருதுவதாகவத் தெரிவித்த அவர், அவ்வாறிருக்கையில், அரசமைப்புப் பேரவையை, அரசியல் கால்பந்தாக மாறிவிடக்கூடாதெனக் கோரியதோடு, அரசமைப்புப் பேரவையைப் பாதுகாக்க வேண்டுமென்றும் கூறினார்.
59 minute ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
7 hours ago
7 hours ago