2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

‘அரசியல்வாதிகளே கடத்துகின்றனர்’

Editorial   / 2019 பெப்ரவரி 04 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட் 

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த அரசாங்கம், அபிவிருத்தி என்ற பெயரில் போதைப் பொருள்களை விதைத்தார்கள் என்று குற்றஞ்சாட்டிய கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில், அரசியல்வாதிகள் ஊடாகவே அதிகளவில் போதைப்பொருள்கள் கடத்தப்படுகின்றன எனவும் தெரிவித்தார். 

 மன்னார் - அடம்பன் மகா வித்தியாலயத்தில், நேற்று முன்தினம் (02) மாலை இடம்பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “நெல்லை அறுவடை செய்ய விதைப்பது போல், வடக்கில் போதைப்பொருட்களை விதைக்கின்றார்கள். இதற்குக் காரணம், அரசியல்வாதிகள். தங்களுடைய சுய இலாபத்துக்காக, தங்களுடைய வாகனங்களிலே போதைப்பொருள்களைக் கொண்டு செல்கின்றார்கள். 

“உண்மையிலேயே, அரசியல்வாதிகளுடைய வாகனங்கள் பெரிதும் சோதிக்கப்படுவதில்லை. நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் என்று குறிப்பிடும் போது, வாகனங்களைப் பொலிஸ் அதிகாரிகள் சோதனையிடுவதில்லை. அந்த வாகனத்தில் என்ன போகின்றது என்பது தெரியாது” என்று தெரிவித்தார். 

இவ்வாறான முறையில் தான்,கடந்த காலங்களில், போதைப்பொருள்கள் தமிழ் மக்கள் பெரிதும் வாழும் பிரதேசங்களுக்குள் அதிகம் வந்துள்ளது எனத் தெரிவித்த அவர், பல இடங்களில் இதைக் கண்டுபிடித்துள்ளதாகவும், அதற்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்ததோடு, இதை நிச்சயமாக நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். 

போதைப்பொருட்கள் காரணமாகவே, சிறுவர் துஷ்பிரயோகம், வன்புணர்வு போன்ற குற்றங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .