Editorial / 2019 செப்டெம்பர் 26 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர், அதிபர் சங்கங்கள் சுகவீன விடுமுறைத் தொழிற்சங்க நடவடிக்கையில் இன்று (26) ஈடுபட்டுள்ளன.
உயர்தரப் பரீட்சை மதிப்பீட்டு பணிகளில் இருந்தும் இன்றும் நாளையும் விலகியிருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எனினும், மதிப்பீட்டுப் பணிகளிலிருந்து விலகுவது தொடர்பில் ஆசிரியர்கள் இதுவரை அறிவிக்கவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜீத ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.
வழமைபோன்று உயர்தரப் பரீட்சையின் மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படும் என ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த குழு இன்று (26) இரண்டாவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளது.
26 minute ago
50 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
50 minute ago
52 minute ago