Editorial / 2023 ஒக்டோபர் 10 , பி.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெயசங்கர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்திற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை, செவ்வாய்க்கிழமை (10) மாலை வந்தடைந்தார்.
அவருடன் வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகள் மூவரும் வந்துள்ளனர்.
இந்தியாவின் புதுடெல்லியில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான IFC-31 என்ற விசேட விமானம் மூலம் அவர்கள் செவ்வாய்க்கிழமை (10) மாலை 05.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் உட்பட இந்திய தூதரகத்தின் அதிகாரிகள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட விருந்தினர் அறைக்கு வருகைதந்து இந்தக் குழுவை வரவேற்று அழைத்துச் சென்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .