2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

இந்தியா சென்றார் பிரதமர் ஹரிணி

Freelancer   / 2025 ஒக்டோபர் 16 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இன்று அதிகாலை இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். 

இன்று முதல் எதிர்வரும் 18ஆம் திகதிவரை அவர் இந்தியாவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. 

பிரதமர் தனது விஜயத்தின் போது, ​​இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனும் உயர் மட்ட பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். 

ஒக்டோபர் 17 ஆம் திதகி NDTV மற்றும் சிந்தன் ஆராய்ச்சி அறக்கட்டளை ஏற்பாடு செய்யும் NDTV உலக உச்சி மாநாட்டில், "நிச்சயமற்ற காலங்களில் ஏற்படும் மாற்றங்களை வழிநடத்துதல்" என்ற தலைப்பில் பிரதமர் சிறப்புரையாற்றவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X