Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 செப்டெம்பர் 08 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்தபோது பலர் அங்கிருந்து தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் மீது எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று மத்திய அரசு கடந்த வாரம் தான் அறிவித்திருந்தது. இருப்பினும், இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தியாவில் நீண்ட கால விசா கோரி விண்ணப்பிக்க முடியாதாம். இது தொடர்பாகச் சில முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் உள்நாட்டுப் போர் பல ஆண்டுகள் உச்சத்தில் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் இலங்கையில் இருந்து பல ஆயிரம் தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார்கள். போர்ச் சூழல் காரணமாக வேறு வழியில்லாமல் அவர்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி சட்டவிரோதமாகத் தமிழகம் வந்தடைந்தனர்.
இருப்பினும், அவர்கள் அகதிகள் முகாமிலேயே தங்க வேண்டி இருந்தது. மேலும், அவர்கள் சட்டவிரோதமாக நாட்டில் நுழைந்தவர்கள் என்பதால் சட்டவிரோதக் குடியேறிகளாகவே கருதப்பட்டனர். ஆனால், இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர்களைச் சட்டப்பூர்வ இந்தியக் குடிமக்களாகக் கருத வேண்டும் என்றும் தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தச் சூழலில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு மிக முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதாவது 2015 ஜனவரி 9ம் தேதிக்கு முன்பு இலங்கையில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்து, அரசிடம் அகதிகளாகப் பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டவிரோதக் குடியேறிகளாகக் கருத மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சட்டப்பூர்வமாகத் தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.
இது இலங்கைத் தமிழர்களுக்கு மிக முக்கியமான ஒரு அறிவிப்பாகப் பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் இப்போது இன்னொரு முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது சட்டவிரோதமாக இந்தியா வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்ற போதிலும் ஆவணமற்ற இலங்கைத் தமிழ் அகதிகள், LTV நீண்ட கால விசா கோரி விண்ணப்பிக்க முடியாது என்று ஒரு மூத்த அரசு அதிகாரி தி இந்து ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவர், "மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பு இருந்தாலும் கூட அவர்கள் நீண்ட கால விசா பெற உதவாது. அதற்கு அவர்கள் தகுதி பெற மாட்டார்கள்" என்றார். அதேநேரம் எதனால் இலங்கை அகதிகள் நீண்ட கால சாவுக்குத் தகுதி பெற மாட்டார்கள் என்பது குறித்து அவர் கூடுதல் தகவல் எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .