2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இராணுவத் தளபதி வெளியிட்ட விசேட அறிவிப்பு

J.A. George   / 2021 ஓகஸ்ட் 20 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் இன்று (20) இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 04 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும், குறித்த காலப்பகுதியில் அனைத்துவிதமான அத்தியாவசிய சேவைகளான மருந்து உற்பத்தி மற்றும் விநியோகம், விவசாயம், ஆடைக் கைத்தொழில் ஆகியவற்றை எவ்வித இடையூறுமின்றி முன்னெடுக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்கான வேலைத்திட்டம் சுகாதாரத் துறையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X