Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 நவம்பர் 24 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டை நிர்வகிக்க முடியாத நிலையொன்று ஏற்படுமாக இருந்தால், பொலிஸாருக்கு உதவும் வகையில் மாத்திரமே இராணுவத்தினர் பயன்படுத்தப்படுவார்கள் என, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுப்பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
மிஹிந்தலை விகாராதிபதியை சந்தித்து ஆசிர்வாதம் பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
தற்போது, சிறையில் உள்ள படையினர் தொடர்பில் தேடிப்பார்த்து அவர்கள் குற்றமற்றவர்கள் என்றால், உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், போதைபொருள் வியாபாரத்தை ஒழிப்பதற்கு எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நாட்டு மக்களின் ஜனநாயகத்தை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .