2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

’இராவணா பாணியை பருகவில்லை

Editorial   / 2021 ஜனவரி 15 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரிட்டிகல இராவணா வம்சத்தின் தேவிந்த லக்சிறி ரணசிங்க என்ற நபரால் தயாரிக்கப்பட்ட, கொரோனா ஒழிப்பு பாணியை தான் அருந்தவில்லை என, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், ஹிக்கடுவ கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்று வரும் இராஜாங்க அமைச்சர் தயாசிறி, தன்னையும் தனது குடும்ப உறுப்பினர்களையும்  இந்தப் பாணியுடன் தொடர்புபடுத்த, அந்தப் பாணியைத் தயாரித்தவர் முயற்சித்தார் எனத் தெரிவித்தள்ளார்.

எனினும், அதற்குத் தான் இடமளிக்கவில்லை எனத் தெரிவித்த தயாசிறி ஜயசேகர, அந்தப் பாணியைத் தனக்கு வழங்கியதாக அந்த நபரால் தெரிவிக்கப்படும் கருத்துகளையும் மறுத்துள்ளார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .